Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை பிரதேசத்தில் நள்ளிரவு போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் இரவு முதல் அதிகாலை வரை விசேட போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கை கல்முனை சுற்றுவட்டம், நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இத் திடீர் சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சாரதிகளிடம் சாரதி அனுமதி பத்திரங்கள் இருந்தும் வீதி போக்குவரத்து ஒழுங்கு முறை தொடர்பில் போதிய அறிவின்மை இல்லை எனவும் அதன் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஊடகவியலாளரிடம் குறிப்பிட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விசேட கடமைக்காக பிராந்திய பொலிஸ் நிலையங்களில் இருந்து பேருந்தில் ஏற்றி வரப்பட்ட பொலிஸார் முக்கிய சந்திகளில் நிலைநிறுத்தப்பட்டனர். இதன் போது விழிப்பூட்டல் செயற்பாடுகள் மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணிவதில்லை ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது அதிவேகமாக செல்வது தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கை
zயானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் போது 100க்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் 60 க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டு்ள்ளது. குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, மோட்டார் சைக்கிளின் பக்க கண்ணாடி இன்மை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பும் கோன் போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments