Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய தகவல்! விரைவாக பகிரவும்

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை மையப்படுத்திய நிதி மோசடிகள் அதிகரித்திருப்பதால் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
குறிப்பாக இலகுகடன் வழங்கப்படுவதாகத் தெரிவித்து பல்வேறு இணைய வழி மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக வங்கிக் கணக்கு விபரங்கள் கடனட்டை மற்றும் முற்கொடுப்பனவு அட்டைகளின் தொடரிலக்கம் மற்றும் இரகசிய இலக்கம் என்பவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கடனை வழங்குவதாகக் கூறி மக்களைச் சமுக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணைய வழியில் அணுகுகின்றவர்களிடம் , மக்கள் தங்களின் தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இந்த தகவலை விரைவாக அனைவருக்கும் பகிரும் படி இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments