Advertisement

Responsive Advertisement

செயல் வீரன் சிவலிங்கத்தின் மறைவு எமக்கு பேரிழப்பாகும்-சிவசக்தி ஆனந்தன்


வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அமரர் கனகசபை சிவலிங்கம் அவர்களுடைய மறைவு வவுனிய மக்களுக்கு ஓர் பேரிழப்பாகும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

13.11.2019 அன்று இறைபதம் அடைந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளரான அமரர் கனகசபை சிவலிங்கம் அவர்களுக்கான இரங்கல் செய்தியிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவ் இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதவாது 

சேமமடுவை பிறப்பிடமாகவும் வ/சண்முகாநந்தா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் ஆகிய அமரர் கனகசபை சிவலிங்கம் பல்வேறுபட்ட அரசியல் சமூக,ஆண்மீக பணிகளிலே தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய ஓர் பெருமகன். 

இவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளராகவும் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தகாலத்திலே பல்வேறுபட்ட சமூக பணிகளை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக யுத்தம் நடைபெற்ற காலத்தில் அரசால் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களில் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களுக்கான உணவு விநியோகங்களை தங்கு தடையின்றி வழங்குவதற்கு அரும்பணியாற்றியிருந்தார். 

அதே போன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளராக இருந்தகாலத்திலும் தன்னால் இயன்ற சமூக அபிவிருத்தி பணிகளை அர்ப்பணிப்போடு செய்துவந்தவர். 

இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் இவரது குடும்பத்தினர்,உற்றார்,உறவினர்கள்,நன்பர்கள் அனைவருக்கும். எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என அவ் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments