ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதாக பந்தயம் கட்டிய வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் 500 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை வென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பந்தயம் கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய காலி, மாத்தறை, குருணாகல், கொழும்பு, களுத்துறை உட்பட பல நகரங்களில் வர்த்தகர்கள் இதற்காக கலந்து கொண்டுள்ளனர்.
மோட்டார் வாகனம், இரத்தினக்கற்கள், தங்க நகைகள், காணிகள், கடைகள் உட்பட பொருட்கள் பந்தயம் கட்டப்பட்டுள்ளன. அதற்கமைய 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் வெல்லப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுக்காக ஆடம்பர மோட்டார் வாகனங்கள், பேருந்துகள் மற்றும் வீடுகளும் பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
0 Comments