Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணத்தில் பாரிய ஆயுதக்கிடங்கு : இராணுவத்தினர் அறிவிப்பு?

அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.
அந்த ஆயுதக் கிடங்கு தொடர்பில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்று அறியமுடிகிறது.
அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. எனினும் அந்த முகாம் வடமாகாண சபைத் தேர்தலை அடுத்து அகற்றப்பட்டது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீகன், அப்பன் மற்றும் கோபி ஆகிய மூவரும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி வவுனியாவில் சுட்டுகொல்லப்பட்டனர்.
அவர்கள் மூவரும் இந்த வீட்டிலிருந்தே பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டுக்கள் வீட்டை வைத்திருந்தனர். தற்போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே அந்த வீட்டை தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதுதொடர்பில் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
அந்த ஆயுதக் கிடங்கு தொடர்பில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்று அறியமுடிகிறது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட வீட்டில் பல தடவைகள் ஆயுதக் கிடங்கு தொடர்பில் ஆராய்ந்த போதும் அதுதொடர்பில் எந்தவொரு ஆயுதமும் கிடைக்கவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments