அம்பாறையில் செயற்பட்டு வரும் மனித உயர்வு மையம் என்ற அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் அட்டாளைச்சேனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றை அடுத்து, பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
காணி அபகரிப்பு, இருப்புக்களை கையகப்படுத்துதலை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு வழங்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நிகழ்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது,
இந்த நிலையில் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments