Home » » பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயதீ மிதிப்பு வைபவம்-2019

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயதீ மிதிப்பு வைபவம்-2019


பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (24.09.2019) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

18 நாட்கள் இடம்பெற்ற ஆலய உற்சவமானது பூர்வாங்க கிரியைகள், திருக்கதவு திறத்தல், பாண்டவர்கள் கடல் குளித்து ஆயுதம் கழுவி வந்து ஊர்க்காவல் பண்ணல், கொடியேற்றம், மகாபாரத பாராயண ஏடு திறத்தல், சுவாமி எழுந்தருளல் பண்ணல் ( ஸ்ரீ கிருஷ்ணர் அத்தினாபுரம் எழுந்தருளல்), நாட்கால் வெட்டல், கலியாணக்கால் வெட்டல், பாண்டவர்கள் திரௌபதை அம்மன்  சகிதம் வனவாசம் செல்லல், அருச்சுனன் தவநிலை செல்லல், தீமிதிப்பு வைபவம், தீக்குழிக்கு பால்வார்க்கும் பாற்பள்ளயச் சடங்கு ஆகியவற்றுடன் இனிது நிறைவு பெற்றது.

மகாபாரதத்தில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையில் நடைபெற்ற போரில் பாண்டவர்கள் சந்தித்த சத்திய சோதனைப் பயணங்களை எடுத்துக்காட்டும் நிகழ்வாக திரௌபதை அம்மன் உற்சவம் அமைந்திருந்தது.
ஆலய உற்சவத்தின் சிகரம் என வர்ணிக்கப்படும் பாண்டவர்கள் திரௌபதையம்மன் சகிதம் தேவாதிகள் தீயில் இறங்கும் தீமிதிப்பு வைபவம் வெள்ளிக்கிழமை (11.10.2019) மாலை சிறப்பாக இடம்பெற்றது.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |