Home » » மன்னாரில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு! ஆபத்தான நிலையில் இனியபாரதி! சிக்கிய மர்மப் பொருள்..

மன்னாரில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு! ஆபத்தான நிலையில் இனியபாரதி! சிக்கிய மர்மப் பொருள்..


மன்னாரில்  உத்தரவை மீறிச் சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார், இலுப்பைக்கடவை வீதியில் அமைந்துள்ள கடற்படையினரின் வீதி சோதனை சாவடியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்

குறித்த இடத்தில் கடமையில் இருந்த கடற்படை அதிகாரிகள், சொகுசு வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போதிலும் உத்தரவை மீறி வாகனம் வேகமாக பயணித்துள்ளது.

இதனால் அந்த வாகனத்தின் டயர்களுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

உத்தரவை மீறிச் சென்ற சொகுசு ஜீப் வண்டியில் கேரளா கஞ்சா 164.3 கிலோ கிராம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி குறித்த சந்தர்ப்பத்தில் சீருடையில் இருந்ததாகவும், அவர் வாகனத்தின் முன் பகுதியில் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.














மன்னாரில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு! ஆபத்தான நிலையில் இனியபாரதி! சிக்கிய மர்மப் பொருள்..

தொடர்புபட்ட செய்தி ......


மன்னார், இலுப்பைக்கடவை வீதியில் அமைந்துள்ள கடற்படையினரின் வீதி சோதனை சாவடியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் கடமையில் இருந்த கடற்படை அதிகாரிகள், சொகுசு வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போதிலும் உத்தரவை மீறி வாகனம் வேகமாக பயணித்துள்ளது.
இதனால் அந்த வாகனத்தின் டயர்களுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் போது அந்த வாகனத்தில் பயணம் செய்த இரு பொலிஸ் அலுவலகர்களும் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழர்களை ஆட்கடத்தல் மற்றும் பல கொலைகளை மஹிந்த மற்றும் கோத்தபாயவிற்காக செய்து கௌரவிக்கப்பட்டவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான கே.புஸ்பகுமார் (இனியபாரதி) படுகாயமடைந்து தற்போது அதிதீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது 164 கிலோ கேரள கஞ்சாவும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |