Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் ரணிலின் எச்சரிக்கையையும் மீறி ஆதரவாளர்களுடன் களமிறங்கிய சஜித்!


அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி அழுத்தம் கொடுக்கும் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகி உள்ளது.
கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் கூட்டம் ஆரம்பமாகி உள்ள நிலையில், பெருமளவு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கீழ் மட்ட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.

கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் வரையில், இவ்வாறான கூட்டங்களை நடத்துவதை நிறுத்துமான கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
அவ்வாறு கட்சியின் விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரணில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments