கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இளைஞர்கழகத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வின் இறுதிநாள் நிகழ்வு இன்று பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் கல்முனை வடக்கு இளைஞர் சேவைகள் அதிகாரி கே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
கடந்த மூன்று தினங்களாக இளைஞர் சேவைகள் அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைபெற்ற இவ் இளைஞர் செயலமர்வில் எதிர்கால சவால்களுக்கு ஏற்ப இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி நாட்டின் நல்லிணக்கத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இப் பயிற்சிகள் வளவாளர்களினால் நடத்தப்பட்டது.
இன்றைய இறுதி நாள் நிகழ்வில் ஊடகத்துறை தொடர்பாகவும் இளைஞர் யுவதிகள் சமூகவலைத்தளங்களினால் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் ஊடகவியலாளர் செ.துஜியந்தன் கருத்துரை வழங்கினார்
0 Comments