நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மட்டக்களப்பு - வாழைச்சேனையில் உள்ள போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இரவு பகல் பாராது மக்களுக்கு சேவை செய்யும் எங்களுக்கு 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் வழங்காமல் உள்ளமை கவலையளிக்கின்றது. எனவே, எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தினை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையேல் எங்களது போராட்டம் தொடரும் என வாழைச்சேனை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சம்பள தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையால் தொழில் புரிவோர், பாடசாலை மாணவர்கள், அன்றாட தொழிலுக்கு செல்வோர் உட்பட பலர் தமது கடமைக்கு உரிய நேரத்திற்கு செல்வதற்கு பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

0 Comments