Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளரின் அராஜகம்! ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்!

நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூரின் சகாவான சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் ஒருவர் ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு மிரட்டிய சம்பவம் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் ஊடகம் ஒன்றின் ஏற்பாட்டில் வித்யாசாகர் கலை மன்றத்தின் அணுசரணையுடன் இலவச நூல் வழங்கும் நிகழ்வு ஒன்று காலை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது அச்சு ஊடகம் இலத்திரனியல் ஊடகம் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் நிகழ்வு மேடைகளில் தங்களது ஊடகம் சார்ந்த ஒலிவாங்கிகளை பொருத்தி செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் திடிரென குரலை உயர்த்தி பேசிய சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் அக்பர் நிஜாம் ஊடக ஒலிவாங்கி உயரமாக இருப்பதாகவும் தனக்கு அவை பிடிக்காது என கூறி ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இதனால் நிகழ்வின் எற்பாட்டாளருக்கும் மருதமுனையை சேர்ந்த சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டது.
இறுதியாக ஊடகவியலாளர்கள் நிகழ்வினை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறி சென்றனர்.



Post a Comment

0 Comments