Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு சற்று முன்னர் வெளிவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று மாலை 3 மணியளவில் கூடிய நிலையில் இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கான பிரேரணையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய செயற்குழு கூட்டத்தில் முன்வைத்திருந்தார்.
அதன் அடிப்படையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு செயற்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளது.
சிறிகொத்தவில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தற்போது அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments