Home » » காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம் - எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி நடவடிக்கை

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம் - எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி நடவடிக்கை

நூருள் ஹுதா உமர்.

காணாமல் போன சாய்ந்தமருது மீனவர்களை தேடும் பணியினை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், மீன்பிடி அமைச்சர் ஹரிசனை சந்தித்து தீவிரப் படுத்தியுள்ளார்.

சாய்ந்தமருதிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் எட்டு நாளாகியும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (25) புதன்கிழமை மீன்பிடி அமைச்சர் ஹரிசனை சந்தித்து விமானப்படையின் உதவியினைப் பெற்று மீனவர்களை தேடும் பணியினை தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கினங்க மீன்பிடி அமைச்சர் ஹரிசன், விமானப்படை தளபதியை தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை தெரியப்படுத்தியதுடன் கடற்பரப்பில் விமானங்கள் மூலம் தேடுதலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கினங்க கடற்படையினரும், மீன்பிடி திணைக்களமும் தங்களது தேடுதலினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு மேலதிகமாக மாலைதீவு மற்றும் மியன்மார் போன்ற வெளிநாட்டு கடற்பரப்பில் தேடுதலினை மேற்கொள்ளும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீன்பிடி திணைக்களம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் இரு நாட்டு தூதுவர்களுடாக அந்நாட்டு மீன்பிடி நிறுவனங்கள், கடற்படை மற்றும் விமானப்படைகளின் ஊடாக தேடுதல்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர்ச்சியாக மீனவர்களை தேடும் பணியினை தீவிரப்பபடுத்தும் முகமாக நாளை கொழும்பில் மீனவ சங்க பிரதிநிதிகள், மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள் உடனான  சந்திப்பினை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பினை  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கொண்டிருந்த போதும்  பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலும் வருகை தந்திருந்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |