கொழும்பு, மஹரகம பிரதான வீதியில் கட்டப்பட்டிருந்த மஹிந்த மற்றும் கோத்தபாயவை வரவேற்கும் பதாதை உடைந்து விழுந்ததில் பல வாகனங்கள் சேதமடைந்ததுடன், சிலர் காயமடைந்தனர்.
|
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவை வரவேற்கிறோம் என அமைக்கப்பட்டிருந்த பதாதையே இன்று காலை உடைந்து விழுந்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோத்தபாய, தான் சூழலுக்கு நெருக்கமான தேர்தல் பிரச்சாரம் ஒன்றையே மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். எனினும் சூழல் மற்றும் பொது மக்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பதாதைகள் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
![]() ![]() |
0 Comments