Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புகையிரதத்தில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

புகையிரதங்களில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ .

இதன்படி ரயில் சேவையை செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்காக 12 ரயில் எஞ்சின்களும், 160 ரயில் பெட்டிகளும் 30 எரிபொருள் தாங்கிகளும் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

அத்துடன் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள 200 ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம் ரயில்வே நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேசிய தொழில்நுட்பவியலாளர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 100 மத்திய நிலையங்களை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments