Home » » இராணுவ தளபதியின் உறவினர்களினால் கிழக்கில் ஏற்பட்ட குழப்ப நிலை!

இராணுவ தளபதியின் உறவினர்களினால் கிழக்கில் ஏற்பட்ட குழப்ப நிலை!

கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவியன் கிராமத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண ராணுவத் தளபதி உட்பட அவரது உறவினர்களின் வருகை ஊடகவியலாளர்களின் திடீர் பிரசன்னத்தினால் தடைப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை( 11) மாலை பாண்டிருப்பு முதல் சாய்ந்தமருது வரை அதிகளவான இராணுவத்தினர் ஒழுங்கைக்கு ஒழுங்கை குவிக்கப்பட்டு பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் மக்கள் சோதனை செய்யப்பட்டிருந்தனர்.
முஸ்லீம் மக்களின் ஹஜ் பெருநாள் தினத்தினை முன்னிட்டு உடுப்பு கொள்வனவிற்காக வந்தவர்களும் இந்த நடவடிக்கையினால் சிரமங்களை எதிர்கொண்டதடன் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளை புகைப்படங்கள் எடுத்த ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டு படங்களும் அழிக்கப்பட்டன.
அத்துடன் இவ்வாறு இராணுவ தளபதியின் குடும்பம் குறித்த தாக்குதலுக்குள்ளான வீட்டை பார்வையிடுவதற்காக வருவதை அறிந்த ஊடகவியலாளர்கள் கடுமையாக விசாரிக்கப்பட்டதுடன் ஏன் வந்தீர்கள் யாரை கேட்டு புகைப்படங்கள் எடுத்துதீர்கள் என மிரட்டியுள்ளதுடன் வீட்டிற்கு இராணுவ தளபதி வருவதனால் அவ்விடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு தெரிவித்தனர்.
இதனால் அச்சமடைந்த ஊடகவியலாளர்கள் 6 பேர் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர்.
எனினும் ஊடகவியலாளர்கள் குறித்த இடத்திற்கு வந்ததை மேலிடத்திற்கு அறிவித்த சம்பந்தப்பட்ட வீட்டின் அருகில் இருந்த இராணுவத்தினர் பின்னர் மேலதிக கட்டளையின் பிரகாரம் அவ்விடத்தில் இருந்து அகன்றனர்.
இவ்வாறு செல்லும் போது நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டை சுற்றி கடும் காவல் நடவடிக்கையை முன்னெடுத்ததுடன் இராணுவ மோட்டார் சைக்கிள் படையணியும் களத்தில் நின்று பொதுமக்களை மிரட்டியதை காண முடிந்தது.
எனினும் இரவு 8 மணியளவில் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்த வீட்டினை குறித்த இராணுவ தளபதியின் குடும்பத்தினர் பார்வையிட்டு சென்றுள்ளதை இராணுவத்தின் சில தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் இராணுவ பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் குண்டுத்தாக்குதலுக்குள்ளான வீட்டை கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கூட்டிச்சென்று காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டை இவ்வாறு இராணுவத்தினர் சென்று பார்ப்பது தொடர்பாக அருகில் உள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருவதுடன் சில இராணுவத்தினர் இவ்வாறு குறித்த வீட்டை பார்ப்பதன் நோக்கம் அதை புனரமைத்து கொடுப்பதற்காக உதவிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி சென்றுள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்வதனால் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்புஇ கல்முனை இசாய்ந்தமருதுஇ காரைதீவு உட்பட பல பிரதேசங்களில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இஸ்லாமிய மக்களின் பெருநாளை முன்னிட்டு நகரத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய கூடியுள்ள மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பெரும் அசௌகரியமாக இருப்பதாக எமக்கு தெரிவித்தனர்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து ராணுவப் புரட்சி ஏற்படுமோ என்ற ஐயப்பாடும் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு தற்கொலை தாக்குதலுக்கு உள்ளான சியோன் தேவாலயத்தை ராணுவ தளபதி உட்பட பாதுகாப்புச் செயலாளர் திடீரென விஜயம் செய்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |