Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நல்லூரானை தரிசித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது; தென்னிந்திய பிரபல தமிழ் நடிகை நெகிழ்ச்சி!

அண்மைக்காலங்களில் தென்னிந்திய நடிகர்கள் இலங்கைக்கு வருகின்றமை அதிகரித்துள்ளது.
அந்தவகையில் பிரபல தென்னிந்திய நடிகை சுகன்யா ஆன்மிக பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நடிகை சுகன்யா யாழ். நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
அந்த வகையில் இன்றையதினம் (13) யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு சென்று மக்களுடன் மக்களாக வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதனையடுத்து நல்லூரானை தரிசித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், நல்லூர் ஆலயத்திற்கு வந்து வழிபாடுகளில் கலந்து கொண்டமை ஒரு சிறப்பான தருணம் எனவும், மிகவும் மகிழ்ச்சியா இருந்ததாகவும், நீங்கள் இவ்வாலயத்தை மிகவும் சிறப்பாக பராமரித்து வருகிறீர்கள் உங்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments