Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தேசிய பயிலுநர் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் 30 ஆம் திகதி (அழைப்புக்கடிதம் இணைப்பு)


தேசிய கல்வியில் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த தேசிய டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் எதிர்வரும் 30.08.2019 அன்று அலரி மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டிப்ளோமாதாரிகளை இணைப்பு செய்யவிருக்கும் பாடசாலையினை தீர்மானிப்பதற்கான விசேட நிகழ்வு எதிர்வரும் 18.08.2019ம் திகதி பி.ப 2.30 மணிக்கு மஹரகம தேசிய கல்வியில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
அன்றைய தினம் கலந்து கொள்வது கட்டாயம் எனவும் அவ்வாறு கலந்து கொள்ளாதவர்களிடம் விருப்பு கோரப்படமாட்டாது எனவும் அழைப்புக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறே அதிபர்கள் வழங்கும் வெற்றிடம் தொடர்பான கடிதங்கள் எதுவும் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
டிப்ளோமாதிகளுக்கு உரிய அழைப்புக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாதிரிக் கடிதம்

















Post a Comment

0 Comments