Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

போர்க்குற்றவாளி இராணுவத் தளபதியாக நியமனம்! அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை!

ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமைக்கு அமெரிக்கா மிகுந்த கவலையடைந்துள்ளதாக கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவின் 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவரது நியமனம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தலைமையிலான கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமாக காணப்படும் இந்த தருணத்தில் இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்குமான அதன் உறுதிப்பாட்டினையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புக்களினாலும் சவேந்திர சில்வாக்கு எதிரான ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments