Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! ஹிஸ்புல்லாவிற்கு எதிராக ரதன தேரர் போர்க்கொடி

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக கிரானில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தலைமையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்தது. எனினும் அதிக மக்கள் தொகை இல்லாததன் காரணத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மதியம் இரண்டு மணி அளவில் கிரானில் இருந்து குறித்த பல்கலை வரையில் ஊர்வலமாகச் சென்று தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
எனினும் தற்போது குறித்த எதிர்ப்பு பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாடுகளில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
மேலும், குறித்த எதிர்ப்புப் பேரணி காரணமாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments