நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித்தா அலுத்கே தெரிவித்தார்.
இதன்படி முக்கியமாக மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரங்களை சட்டபூர்வமாக்கத் தவறியமை மற்றும் மருத்துவர்களுக்கான சேவை நிமிடத்தை திருத்துவது போன்ற கோரிக்கைகள் இவற்றுள் முக்கியமானவையாகும்.
வேலைநிறுத்தம் வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி வரை தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments