24 வயதான ஜாக் லெட்ஸ், பிரித்தானியா மற்றும் கனடா குடியுரிமையை கொண்டுள்ளவராவர். ஆனால், சிரியாவில் பயங்கரவாதக் குழுவுடன் இணைந்த பின்னர் தன்னை ஒரு பிரித்தானியாவின் எதிரி என்று அறிவித்து கொண்டார்.
1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் சதாம் உசேனின் சித்தரவதை முகாமில் பணியாற்றிய குறித்த நபர் மீது, மனித குலத்திற்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவர் பிரக்ஸிட் விவகாரம் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
திருமண விழாவின்போது தற்கொலை குண்டுதாரி வெடிப்பொருட்களுடன் திருமண அரங்கின் அருகில் குண்டுகளை வெடிக்க செய்தான். இதில் அங்கு கூடியிருந்த 63பேர் உடல் சிதறி பலியாகினர்.
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செவரோட்வின்ஸ்க் என்ற நகரத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்ட Burevestnik எனப்படும் doomsday ஏவுகணை முதல் முயற்சியிலேயே வெடித்துச் சிதறியது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் தமிழக சேர்ந்த ஜெயபால் மற்றும் அவரது மனைவி தங்கியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. வீட்டின் அருகில் உள்ளவர்கள், பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் வீட்டை திறந்து பார்த்தபோது தம்பதிகள் இருவரும் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தனர்.
இது போன்ற செய்திகளோடு இன்றைய செய்தி துளிகள் அமைகின்றது.
0 Comments