Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு - கிரான் பகுதியில் சட்டவிரோத மரக்கட்டைகள் மீட்பு

மட்டக்களப்பு - கிரான், புலிபாய்ந்தகல் கோராவெளி பகுதியில் வைத்து 93 மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலையடுத்து சட்டவிரோதமான முறையில் எடுத்துவரப்பட்ட மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் பெறுமதி எட்டு இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மரங்களை ஏற்றி வந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.











Post a Comment

0 Comments