Advertisement

Responsive Advertisement

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இல்லாமல் செய்ய முயற்சி! லிங்கேஸ்வரன்

புலிகளின் ஆயுத முனையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அமைக்கப்பட்டதாக தெரிவித்து அதனை இல்லாமல் செய்ய முயற்சித்து வருவது வேதனை தருவதாக தமிழர் முற்போக்கு முண்ணனி அமைப்பின் உறுப்பினர் கி.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாண்டிருப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் உண்ணாவிரதத்தை கைவிட கூறிய தேரர்களின் வேண்டுகோளை கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர் ஏற்காது மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதாக உதாசீனப்படுத்தினார்.
இதனையடுத்து உண்ணாவிரதத்தை நிறுத்த வந்த பௌத்த தலைவர்கள் சீற்றம் கொண்டனர். இதன்போது அவர்கள், முப்பது வருடகாலமாக தமிழ் தேசிய தலைவர்களுக்கு வாக்களித்து வருகின்றீர்கள்.

எமக்கும் சந்தர்ப்பத்தை தாருங்கள் என உண்ணாவிரதம் இருந்த எங்களை பௌத்த தலைமைகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களது வாக்குறுதிகளுக்கு அமையவே நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம்.
எனினும் உண்ணாவிரத்தில் பங்கேற்றவரின் அடம்பிடிப்பு தான் தற்போது இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் என்பவர் கல்முனை நகரம் முஸ்லீம்களின் சொத்து என கூறி வருகின்றார்.
இவர் பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை. இதனால் தான் வரலாறு தெரியாது புலம்புகின்றார். நான் படித்த பாடசாலையிலே அவரும் படித்திருந்தார். ஆனால் பாடசாலைக்கு ஒழுங்காக அவர் வருவதில்லை.
இவர் இலங்கை சுதந்திரமடைந்த நிலையில் இருந்து கல்முனை நகரம் முஸ்ஸீம் மக்களின் சொத்து என்று கூறுவது அப்பட்டமான பொய். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கல்முனை சேர்ந்தவர்கள் யார் அமைச்சர்களாக இருந்தார் என்பது உலகுக்கே தெரியாத ஒன்று.
கல்முனையை வடிவமைத்தவர்கள் என்று சொல்பவர்கள் அவர்களுடைய சொந்த நிதியில் வடிவமைக்கவில்லை. இவ்வாறு சொல்லி திரிபவர்கள் தோட்டம், சொத்துகளை விற்று இந்த கல்முனை நகரத்தை அமைக்கவில்லை.
ஆகவே ஒவ்வொரு சாதாரண குடிமகனினதும் வரி பணத்திலிருந்து தான் இந்த கல்முனை நகரம் அமையப்பெற்றது.
புலிகளின் ஆயுத முனையில் தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அமைக்கப்பட்டது என்று காலாகாலமாக ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களுடன் இணைந்து பதவிகளை பெறுகின்ற நீங்கள் சுட்டிக்காட்டி இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இல்லாமல் செய்து வருவது வேதனை தருகிறது.
இன்று மக்கள் தங்களது உரிமைகளை கேட்டு உண்ணாவிரதம் போராட்டங்கள் செய்த நிலையில் இதனை ஜீரணிக்க முடியாத நீங்கள் உட்பட சக்திகள் புலிச்சாயம் பூசி திரிகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments