Advertisement

Responsive Advertisement

மீன் பிடித்து விட்டு கரைக்கு வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி


பொத்துவில் களப்புக்கட்டு பிரதேசத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் 81 மி.மீட்டர் மோட்டார் குண்டுகள் சிக்கியுள்ளன.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் ஏதோ சிக்கியிருப்பது அறிந்த மீனவர்கள் கரைக்கு திரும்பிய பின் வலையை பரிசோதித்துள்ளனர்.
அப்போது தான் கறுப்பு நிற பொலித்தீனால் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments