Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம்




(பாறுக் ஷிஹான்)


கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை(18) பாண்டிருப்பு பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது கருத்தில் 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினை தற்போது நீடித்து வருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கடந்த காலங்களில் தரம் உயர்த்தக் கோரி பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் தமிழ் தலைமைகள் என்று சொல்கின்றவர்கள் ஏமாற்றுகின்ற பாணியில் செயற்பட்டமை காரணமாகவே தற்போது பிரச்சினை நீடிக்கின்றது. கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்தபோது பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டே வாக்களித்தனர்.

இன்று ஒன்றும் நடைபெறவில்லை.தற்போது ஹரீஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலகம் என்று ஒரு புரளியை தெரிவிக்கின்றார்.இதனால் ஹரீஸ் தற்போது இவ்வாறு விடுதலை புலிகளினால் பல வருடங்களுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட உதவியுடன் உருவாக்கப்பட்ட தரமுயர்த்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்து வருகின்றார் என தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம்

Rating: 4.5
Diposkan Oleh:
Team New

Post a Comment

0 Comments