Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அதிவேகத்தில் பேருந்துகளை ஓட்டும் சாரதிகளுக்கு வந்துள்ள ஆப்பு! பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அதிக வேகத்துடன் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாறு வேகத்துடன் பயணிக்கும் பஸ் வண்டிகளின் சாரதிகளின் சேவையை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தும் வகையிலான சட்டமொன்று உள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனித மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி அதி வேகத்துடன் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்குத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன் ஆணைக் குழுவுக்கு கிடைக்கும் முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிவேகத்துடன் பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்றபட்ட வேளை வேறு ஒரு பேருந்துடன் அரச பேருந்து மோதயதால் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் இறந்துள்ளார்.
இதனடிப்படையிலேயே தற்போது அரசாங்கம் இந்த நடைமுறையை அமுல்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments