மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இருந்து லிந்துளை பகுதிக்கு 15தொன் கஜீ விதைகள் ஏற்றிவந்த பார ஊர்தி ஒன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ரதாலை சோட்கட் நானுஒயா கார்லிபேக் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 09மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். மட்டகளப்பு ஏறாவூர் பகுதியில் இருந்து நுவரெலியா ஊடாக லிந்துளை பகுதியை நோக்கி பயனித்த பார ஊர்தியின் தடையாளி முறையாக இயங்காமையினாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாரஊர்தியின் சாரதியும் மற்றுமொரு நபரும் தப்பியதன் காரனமாக இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
0 comments: