அமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணைமுறி மோசடி வழக்கில் தவறான சாட்சியம் வழங்கியமைக்காக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், ரவி கருணாநாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முழுமையற்ற ஒரு அறிக்கையை தெரிவித்ததாகவும், பின்னர் மேலதிக தகவலுக்காக அவரை மீண்டும் அழைத்த போது, அவர் சமூகம் தர மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விசாரணைகளை முடிக்க முடியாமல் இருப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments