Home » » இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 ஆட்சேர்ப்புக்கு போட்டிப்பரீட்சை

இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 ஆட்சேர்ப்புக்கு போட்டிப்பரீட்சை


இலங்கை கணக்காளர் சேவையின் தரம் 3 இற்கு 146 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (02) வெளியாகிய அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

திறந்த பரீட்சை மூலம் 86 பேரையும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மூலம் 60 பேரையும் சேர்த்துக்கொள்ள பொது நிருவாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

திறந்த போட்டிப்பரீட்சைக்கு 22 - 30 வயதுக்கு உட்பட்ட பட்டம் அல்லது டிப்ளோமா பெற்ற தகுதிவாய்ந்த ஆண் பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். 

பரீட்சைக் கட்டணம் 1000 ரூபா ஆகும். அதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு தகுதி வாய்ந்த அரச அலுவலர் ஒருவர் 5 வருட சேவையினை கட்டாயம் பூர்த்தி செய்திருத்தல் அவசியம். பரீட்சைக் கட்டணம் 1000 ரூபா ஆகும். 

இரண்டு பரீட்சைகளுக்கும் விண்ணப்பிப்போர் 1500 ரூபா மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்ப முடிவுத் திகதி செப்டெம்பர் 2 ஆம் திகதியாகும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி அறிவித்தள்ளார். 
இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 ஆட்சேர்ப்புக்கு போட்டிப்பரீட்சை

Rating: 4.5
Diposkan Oleh:
Team New
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |