Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அதிபர் விடுதிக் கட்டடம் திறப்பு


கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்திற்கு அமைய நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்ட 250 விடுதி கட்டடங்களும் ஒரே நாளில் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கான அதிபர் விடுதிக்கான கட்டட திறப்பு விழா நிகழ்வு கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா அவர்களது பங்கேற்புடன் அதிபர் நஜீப் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதில் ஏறாவூர் நகர சபை தவிசாளர் வாஸித் , ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் யூசுப் , வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா , கோட்டக் கல்வி அதிகாரி அஹமட் , உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments