Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை மக்களுக்கு ஓர் விசேட அறிவித்தல்; ஒருமாதத்துக்கு நாடுமுழுவதும் சுற்றிவளைப்பு!

இலங்கையில் மது போதையுடன் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களைக் கைதுசெய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு இன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு நடைபெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலான இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் அனைத்துப் பொலிஸாரும் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
இன்றிலிருந்து ஒரு மாத காலத்துக்கு இந்த விஷேட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக கூறிய அவர் கொழும்பு மற்றும் நெரிசல் மிக்க நகரப் பகுதிகளில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.
போதையை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முனெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments