Home » » இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம் - பாதிப்புகள் ஏற்படுமா?

இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம் - பாதிப்புகள் ஏற்படுமா?

இலங்கைக்கு அருகில் மிதமான நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் அளவுக்கோலில் 5.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் இருந்து 650 கிலோ மீற்றர் தூரத்தில் வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10.48 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடல் தளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |