Home » » கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? - கவீந்திரன் கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? - கவீந்திரன் கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்று தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை - நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள சொறிக்கல்முனை, ஹோலி குறோஸ் வித்தியாலய வீதியை தார் வீதியாக புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் அரசுக்கெதிராக கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? அல்லது எதிர்ப்பதா? போன்ற பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகிய நாங்கள் பலதரப்பட்ட அழுத்தங்களை கொடுக்க இருக்கின்றோம்.
விஷேடமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயத்தில் காத்திரமான அழுத்தத்தை இந்த அரசுக்கு கொடுத்து நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆதரவு வழங்குவதா? அல்லது இல்லையா என கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த விடயமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த பிரச்சினைகளை தாண்டி வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறி அவற்றையும் நடைமுறைப்படுத்தாமல் இந்த அரசு தவிர்க்குமானால் அரசுக்கெதிராக சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.

விஷேடமாக நாங்கள் உரிமைச் சார்ந்த விடயங்களை முன்னெடுக்கின்ற அதே வேளை அபிவிருத்திச் சார்ந்த விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொண்டு வருகிறோம்.
நாங்கள் ஒருபோதும் மாற்றினத்திற்கோ அல்லது மாற்று சமூகத்திற்கோ ஆண்டான் அடிமையாக இருக்க முடியாது.
தமிழர்கள் வீரத்தோடு பிறந்தவர்கள் தமிழ்த் தேசியத்தின் மீதும் தமிழின் மீதும் பற்று உறுதி கொண்டவர்களாக எப்போதும் இருக்க வேண்டும் என இந்த நிகழ்வின்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சொறிக்கல்முனை, மத்தியமுகாம் பிரதேசங்களில் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியொதுக்கீட்டில் இடம்பெற்ற வேலைத்திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
நாவிதன்வெளி பிரதேச சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அந்தோனி சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரர் இக்னேஷியஸ், அருட்சகோதரிகள், நாடாளுன்ற உறுப்பினரின் செயலாளர் டி.சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |