Home » » இலங்கையை முற்றுமுழுதாக கணனி மயப்படுத்த திட்டம்! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையை முற்றுமுழுதாக கணனி மயப்படுத்த திட்டம்! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

அறிவில் வளர்சி கண்ட தேசிய நாடு என்ற ரீதியில் கல்வி துறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதன் மூலமே உலகின் அறிவு வளர்சியை கொண்ட நாடாக இலங்கையை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதற்காக கல்வி துறையை நவீன மயப்படுத்தி கணனி மய கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சில்பசேனா கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.
விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு அமைச்சினால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. சுற்றுலா தெழில் துறையை விஞ்ஞான தொழில் நுட்பத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு நாம் திட்டம் வகுத்துள்ளோம். இதற்கு அடிப்படை ரீதியில் கல்வியை கட்டி எழுப்ப வேண்டும்.
இவை அனைத்தையும் மேற்கொள்வதற்கு கிராம மட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதற்காக கம்பரெலிய என்டர் பிரைஸ் சிறிலங்கா என்ற வேலைத்திட்டங்கள் ஊடாக நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்வோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |