Home » » வருகின்றது இவ்வாண்டின் கடைசி சந்திரகிரகணம்.!! ஜோதிடர்கள் கூறும் முக்கிய செய்தி! கட்டாயம் படியுங்கள்

வருகின்றது இவ்வாண்டின் கடைசி சந்திரகிரகணம்.!! ஜோதிடர்கள் கூறும் முக்கிய செய்தி! கட்டாயம் படியுங்கள்

ஆடி 1ஆம் திகதி ஜூலை 17ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 12.13 மணி முதல் 5.47 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் மகர ராசி மேஷ லக்னத்தில் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் நிகழ்கிறது.
இந்த கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் இலங்கையில் பகுதி அளவிலும் அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஆசிய நாடுகளிலும் பார்க்க முடியும்.
அடுத்த சந்திர கிரகணத்தை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே காண முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ஜோதிடத்தில் கிரகண காலத்தில் அதன் கதிர்வீச்சுக்கள் கடுமையாக இருக்குமென்பதால் சில விஷயங்களை செய்யக்கூடாது என்றும் சில விஷயங்கள் நம் உடல் நலனை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக சந்திர கிரகணத்தின் போது, நாம் கிரகணம் முடியும் வரை சாப்பிடக் கூடாது என்ற பழக்கத்தை மேற்கொண்டு வருகிறோம். 
அதற்குக் காரணம் சந்திரனுடைய முழு வீச்சில் இருக்கின்ற கதிர் வீச்சுகள் நம்மீது படும். அது உடலிலும் நம்முடைய உணவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சாப்பிடுவதை தவிர்த்து விடுதல் நம்முடைய பழக்கம். 
நிகழப் போகிற சந்திர கிரகணம் மிக நீண்ட நேரம் இருக்கப்போவதால், எல்லோருக்கும் சாதாரணமாக இருக்கும் சின்ன சின்ன பாதிப்புகளைப் போல அல்லாமல் ஜோதிட ரீதியாக பார்த்தால், சில குறிப்பிட்ட குறிப்பிட்ட கிரகங்களை, அதாவது நட்சத்திரங்களுக்கு இன்றைய கிரகணம் பாதிப்பை ஏற்படுத்தும். 
கிரகண ஆரம்பம் ஜூலை 17 அதிகாலை 1 மணி 30 நிமிடம் 52 விநாடி கிரகண முடிவு அதிகாலை 4 மணி 30 நிமிடம். கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் பூராடம், உத்திராடம், திருவோணம், கிருத்திகை, உத்திரம், கிரகண தோஷ முள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளவும்.
மேற்கண்ட ராசியினர் இரவு உணவினை மாலை 6 மணிக்குள்ளாகவே சாப்பிட்டு முடித்து விடுங்கள். பெண்களாக இருந்தால் மாலை நேரத்தில் தலையில் பூக்களை சூடிக் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்.
அப்படியே முக்கிய காரணத்துக்கான மலர் சூட வேண்டியிருந்தால், அதை மதியம் 12 மணிக்கு முன்பாக செய்யுங்கள்.
கிரகணம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, சிலர் அதை பார்க்க்க கூடாது என்ற மரபு உண்டு. நடக்கப்போகும் சந்திர கிரகணத்தை யாரெல்லாம் பார்க்கக் கூடாது என்ற பட்டியல் இருக்கிறது. 
அதாவது சந்திரன் என்பவர் நம்முடைய மனதுக்கும் உடலுக்கும் தண்ணீருக்கும் காரணகர்த்தாவாக இருப்பார்கள். அதனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்க்கான சிகிச்சை எடுத்து கொள்பவர்கள், கன்னிப் பெண்கள் ஆகியோர் வெளியே வரக்கூடாது. 
ஏனெனில் சுக்கிரனின் கிழமையான வெள்ளிக் கிழமையில் கிரகணம் ஆரம்பித்து சுக்கிரனுடைய கிரகண வீடாண எட்டில் மறைவதால் மேற்கண்டவர்கள் வெளியில் வராமல் இருப்பது நல்லது. 
அப்படியே வேறு வழியில்லை. நாள் அந்த சமயத்தில் வெளியில் வர வேண்டும்.தவிர்க்க முடியாத வேலை இருக்கிறது என்ற கட்டாயம் இருப்பவர்களுக்கு என சில பரிகாரங்கள் உண்டு. அதன்படி நடந்து கொண்டாலும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். 
நீங்கள் அணிந்திருக்கும் மேலாடையில் நுனிப்பகுதியில் சிறிது நெல் அல்லது பச்சரிசியை முடிந்து வைத்துக் கொண்டு செல்லுங்கள். 
அவற்றை கிரகணம் விட்ட பின்பு நீர் நிலைகள் ஏதாவது ஒன்றில் கொட்டி விட வேண்டும். கிரகண கதிர்கள் தாக்காமல் இருப்பதற்காக, வீட்டில் உள்ள தண்ணீர் மற்றும் திரவ வடிவத்தில் உள்ள உணவுப் பொருள்களின் மீது, தர்ப்பைப் புல்லை சிறிது போட்டு வையுங்கள். 
சந்திர கிரகண நாளன்று முக்கியமாக வீட்டை விட்டு வெளியிடங்களில் சாப்பிடக் கூடாது. 
கிரகணம் முடிந்த பின்னால் குளித்துவிட்டு, பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வைத்து கடவுளை வழிபட்டுவிட்டு, பின்னர் சாப்பிட ஆரம்பிக்கலாம். 
தோஷ பரிகாரம் மேலே குறிப்பிட்ட சில பாதிப்படையும் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கிரகணம் முடிந்ததும் அடுத்த நாள் காலையில் எழுந்ததும் ஒரு வெள்ளை நிற துண்டோ, ஜாக்கெட் பிட்டோ, வேஷ்டியோ ஏதாவது ஒன்றை தாம்பூலத் தட்டில் வைத்தில் அதில் கொஞ்சம் நெல் அல்லது பச்சரிசி, முழு மட்டையோடு இருக்கிற தேங்காய், வெற்றிலை, பாக்கு, ஏதாவது பழங்கள், மலர்கள் வைத்து ஏதாவது 11 ரூபாய் தட்சணையோடு சேர்த்து யாருக்காவது தானம் கொடுக்க வேண்டும். 
கண்டிப்பாக பிச்சை கேட்டு வருபவர்களுக்கு கொடுக்கக் கூடாது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கிரகணம் முழுதாக முடிந்த பின்னால் தான் கொடுக்க வேண்டும்.
கிரகண காலங்களில் உடம்பில் எந்த வித சிறிய ரத்த காயங்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
கணவன், மனைவி நிச்சயம் கிரகண காலகட்டத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளவே கூடாது. 
ஏனென்றால் பெண் கிரகண சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குழந்தை குறையுடன் பிறக்க நேரிடும். அதனால் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |