Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஞானசார தேரருக்கு எஞ்சியிருப்பது இன்னும் ஐந்து நாட்களே


கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தி தருவதாக வாக்குறுதியளித்த ஞானசார தேரருக்கு அதனை நிறைவேற்ற இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியிருக்கின்றன.
கடந்த மாதம் 17ஆம் திகதி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி கல்முனையில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 22ஆம் திகதி அதாவது உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து நாட்களில் கல்முனைக்கு சென்ற பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.

அத்துடன் இந்த உறுதிமொழிக்கு ஒருமாத காலக்கெடுவையும் அவரை வைத்திருந்தார். இதேவேளை அரசாங்கம் அதனை தர தவறினால் தானே வந்து கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை கல்முனையில் ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உறுதிமொழியை நிறைவேற்ற அதாவது ஞானசார தேரர் கூறிய முப்பது நாட்கள் காலக்கெடு முடிய இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியுள்ளன.

Post a Comment

0 Comments