Home » » கூட்டமைப்பை வலுப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கூட்டமைப்பை வலுப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


எடுத்ததற்கு எல்லாம் விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி தங்களை முழுத் தமிழ்த் தேசியவாதிகளாக வெளிப்படுத்தி  தாங்கள் மட்டுமே தமிழ்த்தேசியம் பற்றி சிந்திப்பவர்கள் கவலைப்படுபவர்கள் என்று காட்டிக் கொண்டு - அரசியல் செய்யும் சில பிரகிருதிகள் புலிகளின் பெயரால் தமிழினத்தை நடுவீதிக்குக் கொண்டு வந்து விடுவார்களோ என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.

ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளைப் புரிந்து கொண்டு யதார்த்தப் புறநிலைகளை உணர்ந்து , அதற்கேற்ப அரசியல் காய்களை நகர்த்துபவனே தனது மக்களை வழிநடத்துவதற்குத் தகுதியான அரசியல்  தலைவனாக முடியும்.

 கள யதார்த்தைப் புரிந்து கொள்ளாமல், கொள்கைப் பற்று பற்றிய கற்பனைப் புறவுலகில் கனவு கண்டபடி , அரசியல் சித்தாந்தம் பேசுவது அபத்தமானது அர்த்த மற்றது . தமிழ்த் தேசத்தின் மீதான குரூர ஒடுக்குமுறையின் ஆபத்துக்களையும் அதன் தீவிரத்தையும் புரிந்து கொண்டு . அத்தகைய அழிவுசக்திகளுக்கு நம் தமிழர் மந்தியில் இருந்தே துணை போகும் தரப்புக்களை       முறியடிப்பதற்கு தமிழர் மத்தியில் உள்ள நேசத் தரப்புகளை ஒன்றுபடுத்தி , ஐக்கியப்பட்டு , மேலெழுவதே இன்றைய அவசர- அவசிய - கட்டாய - நிலைமை என்பதை இத் தரப்புகள் வேண்டுமென்றே உணர மறுத்து , அரசியல் நடிப்பு மேற்கொள்கின்றமை நகைப்புக்குரியது.

களயதார்த்தத்தைப் புரிந்து கொண்டமையால்தான் காலங்காலமாக பரம அரசியல் எதிரிகளாக இருந்த தந்தை செல்வாவும் , ஐ .ஜி.பொன்னம்பலமும் வேறுபாடுகளை மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாய் ஒன்றிணைந்தனர் . விடுதலைக்கான இராணுவப் போராட்டத்தில் துரோகிகளாக அடையாளம் கண்டவர்களைக்கூட தமிழ்த் தேசியக் கூட்மைப்பு என்ற அரசியல் நேச சக்திகளாக விடுத்லைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரவணைத்தமை மட்டுமல்லாமல் , அதன் மூலம் சம்பந்தப்பட்டோருக்கு தமிழர்கள் மத்தியிலே நிரந்தர அரசியல் அந்தஸ்தையும் அவர் பெற்றுக்கொடுத்தமையும்
அதற்காகத்தான்.

"ஐக்கியம் முக்கியமான" சமயத்தில் பிளவுகளுக்கும் , பிரிவுகளுக்கும் , வேறுபாடுகளுக்கும் காரணம் தேடுவதும் , விளக்கங்களை முன்வைப்பதும் அரசியல்
அற்பத்தனமும் பொறுப்பற்ற போக்குமாம் . இதனையே
ஈ.பி.ஆர்.எல்.எவ் . தலைவர் சுரேஷ்பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார் . "முரண்பாடுகளைக் கருதி கொள்ளாது , காலத்தின் தேவைக்கேற்ப , கூட்டு அணியின் அவசியம் கருதி , புலிகள்கூட்டமைப்பை உருவாக்கியமைபோலவும் , அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தந்தை செல்வநாயகம் , ஐ . ஜி . பொன்னம்பலம் இணைந்து கூட்டணியை உரு வாக்கியது போலவும் இன்றைய சூழலில் கூட்டு இன்று தேவைப்படுகின்றது.இந்தப் பாடங்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிபுரிந்து கொள்ளவேண்டும்" .என்று சுரேஷ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார் . 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான - எதிரான - ஒரு தமிழர் தலைமை தேவை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகின்றமை உண்மையானால் - தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனைப் புறந்தள்ளி குறுகிய கட்சி நலன்களை முதன்மைப்படுத்தும் போக்கிலிருந்து அது வெளியே வரவேண்டும் அப்படி வெளியே வந்தால்தான் தமிழ்த்தேசியக் கூட் டமைப்புக்கு மாற்றான பரந்த - விசாலமான - தமிழ்க் கூட்டுத் தலைமை ஒன்று சாத்தியமாகும் .

 அதைவிடுத்து,ஏட்டுச் சுரக்காய் போன்று நடை முறைக்குச் சாத்தியமில்லாத கொள்கைப் பற்றுக் குறித்துப் பீற்றித் திரிவதும் தங்களை மட்டுமே 24 கரட் தங்கம்போலவும்,ஏனைய தரப்புகள் எல்லாம் கலப்பு உலோகங்கள் எனவும் கருதி , அரசியல் கனவுலகில் தத்துவம் பேசிக் கொண்டிருப்பதும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு வலுவான சக்தியாக உருவாக இடமளிக்கமாட்டாது என்பது மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  தனித்து ஏகோபித்த சக்தியாக வளர்த்தும் விடும் . இது புரியாமல் கற்பனாவாதத்தில்  திகழ்வது அரசியல் திப்பிலித்தனம்தான். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |