Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொலிஸாரின் வேட்டையில் 24 மணி நேரத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கானவர்கள்!

நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 5ஆம் திகதியிலிருந்து இன்று 9ஆம் திகதி காலை வரையான காலப்பகுதிக்குள்ளே 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்யும் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய, இன்று காலை வரை 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இவர்களில் 284 சாரதிகள் நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments