Home » » உலகில் நாம் தான் பெரும்பான்மை இனம்!! எம்மை யாரும் அடக்கமுடியாது!! சற்றுமுன் ஹிஸ்புல்லா அனல் பறக்கும் பேச்சு!!

உலகில் நாம் தான் பெரும்பான்மை இனம்!! எம்மை யாரும் அடக்கமுடியாது!! சற்றுமுன் ஹிஸ்புல்லா அனல் பறக்கும் பேச்சு!!

முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான்
சிறுபான்மை. ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாகக் சொல்லிக்
கொள்கிறோம். இலகுவாக எம்மை அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் என்று யாரும் நினைத்துவிடக்
கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று -07- பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார். தொடர்ந்தும்
பேசிய அவர்,
முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான்
சிறுபான்மை. நாம் மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் உலகத்தில் நாம்
பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாகக் சொல்லிக் கொள்கிறோம்.
இலகுவாக எம்மை அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.
எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேர்தல்
வருகின்ற வேளையில் அதனை வெளிப்படுத்த வேண்டும். அத் தேர்தல் வரை நாங்கள் ஒற்றுமைப் பட்டு
செயற்பட வேண்டும்.
எங்களுடைய ஒற்றுமை என்பது சாதாரணமானது அல்ல. வடக்கு கிழக்கில் இருக்கின்ற எங்களுடைய
இராஜினாமா என்பது பெரியது அல்ல. அமைச்சர் கபீர் காசிம், ரவும் ஹக்கீம் போன்ற முக்கியமான
தலைவர்களின் பதவி விலகல்கள் பெரியது. அவர்கள் சிங்கள மக்களின் வாக்குகளாலும் வெற்றி
பெற்றவர்கள். அவர்கள் எல்லாம் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காவும்
ஒற்றுமையாக எடுத்துள்ள முடிவு இது.
ஆகவே நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும். எங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள்
முரண்பாடுகளை மறக்க வேண்டும். நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். என்ன பிரச்சினைகள்
வந்தாலும் அவற்றுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
நான் ஜனாதிபதியிடம் இரண்டு வார கால அவகாசம் கொடுத்திருக்கிறேன். என்மீதான
குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். ஏனெனில் நாங்கள் மிகத்
தெளிவாக இருக்கிறோம். அப்பட்டமான பொய்களை பௌத்த துறவிகள் தலதா மாளிக்கைக்கு முன்னால்
சொல்லி நாட்டு மக்களையும் நாட்டையும் ஏமாற்றினார்கள் என்ற செய்தியை நாம் இந்த மக்களுக்கு
வெளிப்படுத்த வேண்டும்.
பல பிரச்சினைகளை நாங்கள் பேசிக் கொண்டு போக முடியும். ஆனால் அதற்குப் பதவிகளிலிருந்து
பேசிக் கொள்ள முடியாது. ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பேச முடியாது. நான் ஒரு
கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்க முடியும்.
அதனால் எங்களால் முடிந்தவரை உங்களுடைய பாதுகாப்புக்களை உறுதிப்படுத்த முடியும். இன்று
எங்களது உரிமைகளைப் பாதுகாப்பதும், கௌரவமான முறையில் வாழ்தலை ஏற்படுத்துவதற்கும் வழி
ஏற்படுத்துவோம்.
நாங்கள் ஒருபோதும் மனம் தளரக்கூடாது. முன்மாதிரியாக இருக்க வேண்டும். வடகிழக்கு
வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பயந்து நடுங்கி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள்
வீடுகளை விட்டு வெளியேறவில்லை. வியாபாரங்களுக்குச் செல்லவில்லை.
இப்படி நாங்கள் பயந்து வாழ முடியாது. அவர்களை நாங்கள் வெளியே கொண்டுவர வேண்டும்.
அவர்கள் பயணம் செய்ய வேண்டும், தொழில்கள் செய்ய வேண்டும், அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்
என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |