Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை போராட்டத்தில் இணைந்தார் மட்டக்களப்பு விகாராதிபதி


கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி கல்முனையில் மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் நேரில் சென்று ஆதரவு வழங்கியுள்ளார்.
மேலும் இவரது வருகையின் பின்னர் மட்டக்களப்பு விகாராதிபதியும் அவ்விடத்திற்குச் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பெருந்திரளான மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி சர்வ மதத்தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments