Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழ்-முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்தித்தார் ரத்ன தேரர்; அடுத்து நடக்கப்போவது என்ன?

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தரப்புடன் கல்முனை மாநகரசபை கட்டிடத்தில் விஷேட சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது அம்பாறை செய்தியாளர் குமணன் களத்திலிருந்து கூறுகிறார்.
கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த அதுரலிய ரத்ன தேரர், முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை கல்முனை மாநகர சபை மேயரின் அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான இறுதி முடிவினை ஆராய்ந்து இவ்விரு சமூக பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என சந்திப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments