Home » » கல்முனை நோக்கி படையெடுக்கும் மக்கள்! முடங்கியது கிழக்கு! பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!

கல்முனை நோக்கி படையெடுக்கும் மக்கள்! முடங்கியது கிழக்கு! பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!



கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி 4வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்,சிங்கள மக்கள் ஆதரவளித்துவருகின்றனர்.
இன்று காலை 8 மணியளவில் சேனைக்குடியிருப்பு கணேச மகாவித்தியாலயத்திற்கு அருகிலிருந்து கல்முனை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணியாக சிறுவர் முதல் பெரியோர் வரை சென்று தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உண்ணாவிரதமிருக்கும் மதகுருமார், சக போராட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவே இந்த அமைதி பேரணி இடபெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக பதாதைகள் ஏந்தி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக உண்ணாவிரதப் போராட்தில் ஈடுபட்டு தங்களது பூரண ஆதரவினை வழங்கிவருவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்றையதினம் கிழக்கு மாகாண ரீதியில் ஹர்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக கிழக்கு மாகாணம் முழுவதும் அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற காரியாலயங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் என அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு முழு ஆதரவினையும் வழங்கிவருகின்றனர். இந்தநிலையில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வர்த்தகர்கள் கடைகளை அடைத்து உண்ணாவிரதத்திற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர். மாணவர் வரவு இன்மையால் பாடசாலைகள் வெறிச்சோடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |