Home » » உண்ணாவிரதிகள் வைத்தியசாலைக்கு(மூன்றாம் இணைப்பு)

உண்ணாவிரதிகள் வைத்தியசாலைக்கு(மூன்றாம் இணைப்பு)

இதேவேளை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திய பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வைத்திய பரிசோதனையின் பின்னர் போராட்டம் நீராகாரம் அருந்தி தொடருமெனவும் போராட்டகாரர்கள் அறிவித்துள்ளனர். விரைவில் நல்ல செய்தியோடு வருவதாகவும் அதுவரை போராட்டதை சுழற்சி முறையில் மேற்கொள்ளுமாறும் ஞானசார தேரர் அறிவுரை வழங்கியுள்ளார்.சிங்கள பௌத்த அமைப்பினரும் சுழற்சி முறையில் போராட்டத்தினை நீராகாரம் அருந்தி தொடர்கின்றனர்.
ஞானசாரதேரரின் முயற்சி தோல்வி! பரபரப்படையும் போராட்டக் களம்! போராட்டத்தில் ஏற்பட்ட மாற்றம்! (இரண்டாம் இணைப்பு)
எனினும் மாநகரசபை உறுப்பினர் தான் நீராகாரம் மட்டும் அருந்தி தனது போராட்டத்தை தொடரவுள்ளதாகவும், ஏனையவர்கள் சுழற்சி முறையில் தமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளும் போராட்டக் காரர்களை இன்றைய தினம் வடக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு ஒரு மாத காலத்துக்குள் தீர்வு பெற்றுத் தரப்படும் என ஞானசார தேரர் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் தியாகராஜன் தான் தொடர்ந்தும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஏனைய நால்வரும் தாமும் நீராகாரம் மட்டும் அருந்தி தொடர்ந்தும் இதே இடத்தில் தமது போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் அமைச்சர் மனோகணேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் போராட்டக்களத்திற்கு அரசாங்கத்தின் செய்தி ஒன்றை எடுத்துச் சென்றிருந்தனர்.
ஆனால் அங்கு கூடியிருந்த மக்கள் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு அவர்களை திருப்பி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஞானசாரதேரர் வழங்கிய உறுதிமொழி!கைவிடப்பட்டது உண்ணாவிரதப்போராட்டம்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கடந்த ஆறு நாட்களாக இடம்பெற்றுவந்த உண்ணாவிரதப்போராட்டம் ஞானசாரதேரர் அளித்த வாக்குறுதியை அடுத்து இன்று கைவிடப்பட்டது.
இன்றையதினம் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்குச்சென்ற ஞானசாரதேரர் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் தீர்வைப்பெற்றுத் தருவதாகவும் எனவே உண்ணாவிரதப் போரட்டத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தார்.ஞானசாரதேரரின் உறுதிமொழியை அடுத்து உண்ணாவிரதிகள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஞானசாரதேரர்

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சனை இன்று நேற்று உருவாக்க பட்டதொன்றல்ல.இதனை அடைவதற்கு பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி கண்டனர். ஒரு வெளிப்பாடாகவே இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டது என்ற செய்தி விரைவில் உங்கள் காதுகளுக்கு எட்டும். அரசியல்வாதிகளின் இரட்டை வேடங்களை நாம் களைந்து அனைவரும் நிகழ்ச்சி நிரலொன்றின் கீழ் ஒற்றுமையாக ஒரே நாட்டின் தாய்,பிள்ளைகள் போன்று செயற்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |