Home » » ஹிஸ்புல்லாவின் மட்டு. பல்கலைக்கழகம் அம்போ! இடியாய் வந்த செய்தி.

ஹிஸ்புல்லாவின் மட்டு. பல்கலைக்கழகம் அம்போ! இடியாய் வந்த செய்தி.


மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
ஹிஸ்புல்லாவின் பொய்கள் அம்பலம்!
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து எந்தவொரு கடன் நிதி உதவியும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் பிரதான அலுவலகததின் முகாமையாளர் ஜனக் பிரசன்ன நேற்று வழங்கிய வாக்குமூலத்திற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மத்திய வங்கியின் அனுமதியின்றி எந்தவொரு வெளிநாட்டு கடனுதவியும் கணக்கில் வைப்பு செய்ய முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Batticaloa Campus என்ற குறித்த கணக்கிற்கு வெளிநாட்டில் இருந்து பல்வேறு நபர்கள் பல சந்தர்ப்பங்களில் பணம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, பல்கலைக்கழகத்திற்கான வங்கி கணக்கிற்கு வெளிநாடு ஒன்றினால் கடனாக நிதியுதவி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |