Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன மத பேதமின்றி திருக்கேதீஸ்வர நுழைவாயில் அமைக்க அனுமதி

ISIS தீவிரவாதிகளால் இலங்கையில் மதவன்முறைகள் மக்களை அழிவு பாதையில் இட்டு செல்லும் நிலையில் மன்னார் பிரதேச சபையின் செயற்பாடு அனைத்து மதத்தவர்களையும் பாரட்ட வைத்துள்ளது.

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் குறித்த இடத்தில் நிரந்தரமாக வளைவை அமைப்பதற்கு தவிசாளர் உட்பட 10 முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களும் 12 கத்தோலிக்க உறுப்பினர்களும் ஒரு இந்து உறுப்பினரும் கூட்டாக இணைந்து அனுமதியை வழங்கியுள்ளனர் இந்த விடயம் இலங்கை வாழ் அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக  மன்னார் மாவட்டத்தை சேர்ந்த புத்திஜுவி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் முள்ளிவாய்க்கள் யுத்தத்தின் பின்னர் மன்னாரில் மதவாதம் சில அரசியல்வாதிகளாலும், மத தலைவர்களின் தலமையில் கட்டவிழ்த்து விடப்பட்டது.

இன்று மன்னார் பிரதேச சபையின் இந்த செயற்பாடு மன்னார் மாவட்டத்தின் நல்லிணக்கத்தின் ஆரம்ப பள்ளியாக உள்ளது. இவ்வாறு சகல மத தலைவர்களும் மக்களும் இணைத்து மன்னார் மாவட்டத்தை முன்னேற்றமான பாதையில் ஈட்டு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினகளாகிய  செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் குறித்த மத நல்லிணக்கத்தை இனிவரும் காலங்களில் குழப்பாமலும் குழப்பாமலும் பார்த்து கொள்ளவேண்டிய நடந்து கொள்ளவேண்டும் என்பதே அனைத்து மன்னார் வாழ் மக்களின் விருப்பமாகும்

Post a Comment

0 Comments