Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை நோக்கி சென்ற பேரணியை குழப்பிய முஸ்லிம் கும்பல்

இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து, கல்முனையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணியொன்று சென்றுள்ளது.
இந்த அமைதி பேரணியில் சிறுவர் முதல் பெரியோர் வரை பங்கு கொண்டிருந்த நிலையில் இந்த பேரணிக்கு முஸ்லிம் கும்பல்களால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அனைவரும் இணைந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக, பதாதைகளை ஏந்திய வண்ணம் உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு வந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் அப்பகுதியில் சுமூக நிலையினை ஏற்படுத்தி பேரணியை முன்னெடுக்க உதவியுள்ளனர்.

Post a Comment

0 Comments