Home » » பூஜிதவின் சாட்சியத்தில் அம்பலப்படுத்திய பல உண்மைகள்!

பூஜிதவின் சாட்சியத்தில் அம்பலப்படுத்திய பல உண்மைகள்!

இன்று நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியமளித்த பூஜித வழங்கிய சாட்சியம்;
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் தாம் கலந்து கொள்ளவில்லையென கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்ட விடயங்களை விசேட அதிரடிப்படை இகுற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படவிளக்கம்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்றைய தினம் மீண்டும் கூடியது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் சாட்சியமளித்த போதே பொலிஸ் மா அதிபர் இதனை குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இறுதியாக கடந்த வருடம் ஒக்ரோபர் 23 ஆம் திகதியே தான் கலந்துகொண்டதாகவும் அதற்கு பின் தான் ஏன் அழைக்கப்படவில்லை என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது அல்லது பொலிஸ் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தமையினால் அழைப்பு விடுக்கப்படாமல் இருந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் வினவிய போது ' மன்னியுங்கள் . இது ஜனாதிபதியின் உத்தரவு ' என்று அவர் தன்னிடம் தெரிவித்தாக பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களம் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இயங்கியபோது தேசிய புலனாய்வுத்துறை பாதுகாப்பமைச்சின் கீழ் தான் இயங்கியது.
தேசிய புலனாய்வுத்துறை பிரிவுகளுக்கு நான் செல்ல முற்பட்டபோது எனக்கு உரிய பிரதிபலிப்பு காட்டப்படவில்லை.
குற்றப் புலனாய்வு துறை .இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்யும்படி பல தடவைகள் அழுத்தங்கள் வழங்கப்பட்டன.அதனை செய்யுமாறு ஜனாதிபதி என்னிடம் கோரியிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பமைச்சில் நடைபெற்ற புலனாய்வுத்துறை இணைப்புக்குழு கூட்டத்தில் ஏப்ரல் 9 ஆம் திகதி தான் கலந்து கொண்டிருந்ததாகவும் தாக்குதல் சம்பந்தமான விடயங்கள் அங்கு கூட்டத்தின் ஒரு அங்கமாகவே கலந்துரையாடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தாக்குதல் சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்ட விடயங்களை விசேட அதிரடிப்படை, குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் போக்குவரத்து, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு, மேல்மாகாண பொலிஸ் ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்மாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
அவர்கள் சற்றுமுன்னர் அங்கு முன்னிலையாகியுள்ள நிலையில், தற்போது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள 7 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |