Home » » கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து வெளியாகும் திடுக்கிடும் ஆதாரங்கள்!

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து வெளியாகும் திடுக்கிடும் ஆதாரங்கள்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வரலாற்றைப் பார்க்கும் போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன .
1989 ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக அங்கிகாரம் வழங்கப்பட்ட பிரதேச செயலகத்தை செயற்பட விடாது தடுத்து வருகின்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது கரவாகு வடக்கு உப பிரதேச செயலகமாக 31 கிராம சேவகர்கள் பிரிவை உள்ளடக்கி 1989ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரசுரிக்கப்பட்டது முதல் இயங்கி வருகிறது.
கரவாகு வடக்கு செயலகமும், நாவிதன் வெளி செயலகமும் இயங்க அன்றைய உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் தேவநாயகம் அம்பாறை அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
1989ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி இடப்பட்ட கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் 1993ம் ஆண்டு அன்றைய காலநேரத்தில் இலங்கையில் 28 உபசெயலகங்கள் (கல்முனை வடக்கு உட்பட) இயங்கி வந்தது.
குறித்த 28 பிரதேச உப செயலகங்களை தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அத்துடன் 1994 ம் ஆண்டு முதல் குறித்த 28 செயலகத்துக்குமான நிதி ஒதுக்கீட்டுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது அமைசச்சரவை தீர்மானம் கடந்த 1993.07.28. அன்று நிறைவேற்றப்பட்டு 1993ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி கடிதம் மூலம் அதை அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அனுமதி அளித்தும் ஒரு சில அரசியல்வாதிகளின் அரசியல் நடவடிக்கைக்காக இலங்கையின் குறித்த ஒரு பகுதியினை நிர்வாக ரீதியில் கூட நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது என்பதே வரலாறு.
அதாவது சுமார் 25 வருடங்களுக்கு மேல் ஒரு அரசாங்க வர்த்தமானி பிரகடனத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றால் கிழக்கில் தனியான இஸ்லாமிய நிர்வாகம் ஒன்றிற்கு அரசு ஆதரவு வழங்கி உள்ளது என்பதே அர்த்தம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |